எனது முந்தைய பதிவை படித்த அனைவருக்கும் நன்றி பாராட்டி அதன் தொடார்ச்சி பதிவை பதிவு செய்கிறேன். மூன்று பாலாக பிரித்ததில் சைட் பால் பற்றி படித்திருப்பீர்கள். இப்பொழுது இரண்டாம் பாலான காதல் பால் பற்றி காண்போம். பார்பதற்கு முன் படித்த பிறகு என்னை வஞ்சிக்க யோசித்தால் தனியாக அழைத்து வஞ்சிக்கலாம், உதைக்கலாம். நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. காதல் பால் அகர முதல எழுத்தெல்லாம் முதல் காதலி முதற்றே உலகு. காதலில் சிறந்தது கோவிலும் இல்லை காதலி சொல்மிக்க மந்திரமில்லை. கருப்புக்காகம் கலராகக் கண்ணில் காண காதல் செய்து பார். சுண்டல் காதல் கடற்கரை வரை உண்மைக்காதல் சுடுகாடு வரை. காதலன் காதலி கைபேசியில் பேச தந்தைச்சொத்து அழிவது உறுதி. மனைவி அமைவது இறைவன் செயலன்றோ காதலி அமைவது அவன்பாவச்செயல். காதலிக் கொஞ்சிப் பேசினால் காதலன் காசுக்கரியாகும் வழி எனக்கொள். சிகரெட்டால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே காதலிச்சுட...
I am so clever that sometimes I don't understand a single word of what I am saying... FR33KiLL's BL0G